Thursday, February 4, 2010

அசத்தும் அசல்

  
 
அசல் அ‌ஜித்தின் 49வது படம். பொ‌ங்கலுக்கு வரவேண்டியது, இரு வாரங்கள் கழித்து நாளை வெளியாகிறது.

அ‌ஜித் படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியான படம், பில்லா. ஏறக்குறைய 300 திரையரங்குகள். அவரது படங்களில் அதிக வசூல் செய்த பெருமையும் அதற்கு உண்டு.

அசல் ஏறக்குறைய 500 திரையரங்குகளில் - உலகம் முழுவதும் - வெளியாகிறது. மல்டி பிளிக்ஸ்களும் இதில் அடக்கம். இத்தனை அதிக திரையரங்குகளில் வெளியான பிறகும் அசலின் ஓபனிங் ‌ரிசர்வேஷன் படு பிரமாதம் என்கிறது திரையரங்கு வட்டாரங்கள்.

சென்னையில் அசல் வெளியாகும் அனைத்து திரையரங்குகளும் முதல் மூன்று தினத்துக்கு ஹவுஸ்ஃபுல். சில திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

சரண், அ‌ஜித் காம்பினேஷன் என்பதால் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நிலவுகிறது. மேலும் பில்லாவின் வசூல் சாதனையை இப்படம் முறியடிக்கும் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.

அசலின் ஓபனிங் ‌ரிசர்வேஷன் அந்த நம்பிக்கையை உறுதி செய்கிறது. 

-tamil.webdunia.com 

தல அசத்துங்க - அசல்

No comments:

Post a Comment